மூடவும்

திரு. அ.சண்முக சுந்தரம், இ.ஆ.ப.

Thiru. A. Shanmuga Sundram, I.A.S.,

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. அ.சண்முக சுந்தரம், இ.ஆ.ப. அவர்கள் 2011 வருடத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்த விவேகானந்தா கல்லூரியில் விலங்கியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டமும், சென்னை கிறித்தவக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் வருவாய் கோட்டாட்சியராகவும், மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றிய பின், பவானி சாகர் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பயிற்சி நிலையத்தின் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். 2011 ல் இந்திய ஆட்சிப் பணி அந்தஸ்த்தைப் பெற்ற பின் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தின் கூடுதல் இயக்குனராகவும் , சென்னை மாவட்ட ஆட்சித்தலைவராகவும் பணியாற்றியப் பின்னர் 01-07-2019 முதல் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றி வருகிறார்.