டாக்டர்.கலைஞர் கருணாநிதி - மாவட்ட அறிவியல் மையம்
டாக்டர்.கலைஞர் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம் தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தினால் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் 25.01.2011 அன்று தொடங்கப்பட்டது. இம்மையத்தில் கண்டுபிடிப்புகளின் காட்சிக்கூடம், இயல் அறிவியல் காட்சிக்கூடம், சுற்றுச்சூழல் காட்சிக்கூடம் மற்றும் தொழில்சார் காட்சிக்கூடம் போன்ற நான்கு காட்சிக்கூடங்களை உள்ளடக்கியுள்ளது. முப்பரிமாண அறிவியல் அரங்கு வானவியல், விண்வெளி ஆய்வு மருத்துவ அறிவியல், மரபணுவியல், விண்கலம் ஆகியவற்றின் செயல்பாடுகளை உணரும் வண்ணம் முப்பரிமாண அறிவியல் பட காட்சியை கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிறு கோளரங்கம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பார்த்து பயனுறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோளரங்கத்தில் விண்வெளி படக்காட்சியை கண்டுகளிக்கலாம்.
நேரம் : காலை 10.00 முதல் மாலை 5.45 வரை