முக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்
கங்கை அம்மன் திருவிழா
குடியாத்தம் நகரில் நடைபெறும் “கங்கை அம்மன் திருவிழா” , வேலூர் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க திருவிழாக்களில் ஒன்று. வைகாசி மாத பிறப்பையொட்டி நடை பெறும் இத்திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறையளிக்கப்படுகிறது.
புஷ்ப பல்லக்கு
சித்திரை பௌர்ணமி இரவில் வேலூர் நகரத்தை சேர்ந்த முக்கிய கோவில்களின் உற்சவ மூர்த்திகளின் ஊர்வலம் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்குகளில் நடைபெறுகுகிறது.
வேளாண் சுற்றுலா மையம்
அறிவுத்தோட்டம் (மாற்றங்களின் நாற்றங்கால்)
இயற்கை விவசாய பண்ணை- வேளாண் சுற்றுலா மையம் மற்றும் கருத்துக் களஞ்சியம் ( Organic farming- Agro Tourism – Resource Center )
அறிவுத்தோட்டம் வேளாண் சுற்றுலா மையமாகசிறப்பாக செயலாற்றி வருகிறது. பூந்தோட்டம், காய்கறி, மூலிகை, பழத்தோட்டம்,வெற்றிலை குடில்,
கோழிப்பண்ணையுடன் ஒருங்கிணைந்த பண்ணையம்.15 ஆண்டுகளாக 100% ரசாயனம் இல்லாமல் நஞ்சில்லா உணவு உற்பத்திசெய்கிறது. குழந்தைகள்
விளையாட மாந்தோப்பு & ஊஞ்சல்கள்,ஓய்வெடுக்க புல்பரப்பு,பள்ளி / கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் பொதுமக்கள் எனஅனைவரையும்அறிவுத்தோட்டம்
வரவேற்கிறது.
.
| விவரம் | இணைப்பு |
|---|---|
| வேளாண் சுற்றுலா மையம் | சொடுக்குக |