மூடவும்

இந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை

இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் நிர்வகிக்கப்படும் அருங்காட்சியகம் வேலூர் கோட்டையின் பாதுஷா மற்றும் பேகம் மகால்களில் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கிடைத்த கற்சிலைகள், வீரக்கற்கள் மற்றும் வேலூர் சிப்பாய் கலகம் பற்றிய ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமைத் தவிர, வாரத்தின் ஏனைய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிட திறந்திருக்கும். பார்வையாளர் கட்டணம் எதுவும் இந்த அருங்காட்சியத்தில் விதிக்கப்படுவதில்லை.