மூடவும்

காணத்தக்க இடங்கள்

வானாய்வகம் – காவலூர்

வானாய்வகம் – காவலூர்

ஜவ்வாது மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் இது வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வட்டத்தில் உள்ளது. இவ்வூரில் ஆசியாவில் பெரிய தொலைநோக்கியான வைணு பாப்பு வானாய் வகம் உள்ளது.

 

 

 

 


லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் – சோளிங்கர்

லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் - சோளிங்கர்

வேலூரிலிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம் இத்தலத்தில் நரசிம்மரும் ஆஞ்சநேயரும் யோகசனத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். மலைக்கோயிலின் நீளம் 200 அடி அகலம் 150 அடி ஏறத்தாழ் 1 ஏக்கர் பரப்பு 750 அடி உயரத்தில் சுமார் 1305 படிக்கட்டுகளோடு மலைமீது அமைந்துள்ளது. இங்கு பெரிய மலை சிறிய மலை என இரண்டு மலைகள் உள்ளன.

 

 


மார்க்கபந்தீஸ்வரர் கோயில் – விரிஞ்சிபுரம்

மார்க்கபந்தீஸ்வரர் கோயில் – விரிஞ்சிபுரம்

வேலூரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது. சுவாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக, சாய்ந்த மகா லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியகதிர்கள் விழுகின்றன. இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இது கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ளது. இங்கு சிங்கமுக வடிவத்தில் ஒரு குளம் உள்ளது. இதனைச் சிம்ம தீர்த்தம் என்று அழைக்கின்றனர். கார்த்திகை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் இக்குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்வது சிறப்பாகும்.

 

 

 

 


பாலமுருகன் கோயில்

பாலமுருகன் கோயில்

ரத்னகிரி பாலமுருகன் கோயில் வேலூரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் திருமணிக்குன்றம் அருகே உள்ள ஒரு பழமையான முருகன் கோயில். இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது.

 

 

 

 

 

 


முருகன் கோயில் – வள்ளிமலை

முருகன் கோயில் – வள்ளிமலை

வேலூரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது. பல்லவ கால குடவரைக் கோயிலாகும். சுமார் 400 படிக்கட்டுகள் உள்ளன. வள்ளி பிறந்த தலமாகும் மற்றும் முருகனை திருமணம் செய்த தலமாகும்.