மூடவும்

கைவினைப் பொருட்கள்

கரிகிரி மண்பாண்டங்கள்

Karigiri Water Jug

வேலூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரிகிரி என்னும் கிராமத்தில் சீனக் களிமண்ணில் செய்யப்படும் புகழ்பெற்ற கரிகிரி மண்பாண்டங்கள் தயார் செய்யப்படுகின்றன. சுமார் 400 வருடங்கள் முன்பு ஆற்காடு நவாப்களின் ஆதரவில், அவர்களுக்காக இந்த மட்பாண்டங்கள் தயார் செய்யப்பட்டன. சில குடும்பங்கள் மட்டும் ஈடுபட்ட இந்த தொழில் தற்பொழுது அழியும் தருவாயில் உள்ளது. நீர்க் குவளையின் உள்ளே ஊற்றப்படும் நீர் திரும்ப மேல் வழியாக வருவதில்லை; அதன் நீர் ஊற்றும் துவாரத்தின் வழி மட்டுமே வரும். ஆற்காடு நவாப்களின் உணவுப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதைப் போன்ற மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. நீர்குவளைகள் தவிர மாய கிருஷ்ணன் மற்றும் சிவ லிங்கம் போன்ற மண் பாண்டங்கள் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணர் அல்லது சிவலிங்க உருவம் பொறிக்கப்பட்ட மேல் பாகத்தில் ஊற்றப்படும் நீரானது ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடையும் வரை கீழ் வழி வருவதில்லை என்பதே இதன் சிறப்பு.

வாலாஜா பிரம்பு அறைக்கலன்கள்

walajah Cane furniture

சுமார் 400 ஆண்டுகள் முன்பு ஆற்காடு நவாப்களின் தேவைக்காக பிரம்பின் மூலம் அறைகலன்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு வாலாஜா பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. சில குடும்பங்கள் மட்டும் ஈடுபட்ட இந்த தயாரிப்பில் தற்பொழுது பலரும் பயிற்ச்சி பெற்று ஈடுபட்டு வருகின்றனர். கதர் வாரியத்தின் கீழ் பதிவு பெற்ற சங்கத்தின் மூலமாக இந்த தொழில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.