மூடவும்

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்

தமிழகத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர். அவர்களால் ஊரக பகுதிகளில் 01.07.1982 அன்றும் நகர்புறங்களில் 15.09.1982 அன்றும் உருவாக்கப்பட்டது.

1. சத்துணவுத்திட்டத்தின் நோக்கம்

பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகைசெய்தல்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துதல்.

பள்ளி பயிலும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுத்திடுதல்.

2.சத்துணவுத்திட்டம் துவங்கப்பட்ட முதல் நாளது வரை செயல்படுத்திய துறைகள்

பள்ளிக்கல்வித்துறை 1982 முதல் மே 1990 வரை

ஊரக வளர்ச்சித்துறை சூன் 1990 முதல் செப்டம்பர் 1992 வரை

சமூக நலத்துறை அக்டோபர் 1992 முதல் செப்டம்பர் 1997
ஊரக வளர்ச்சித்துறை அக்டோபர் 1997 முதல் 19 சூலை 2006 வரை

சமூக நலத்துறை 20 சூலை 2006 முதல் நாளது வரை (ஊரகம்),23 ஆகஸ்டு 2007 முதல் நாளது வரை (நகர்புறம்)

சத்துணவுத்திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உள்ளாட்சி பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலம், சிறுபான்மையினர் மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கான நிதி மாநில மற்றும் மத்திய அரசுகளால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வ.எண் விபரம் மையங்கள் எண்ணிக்கை 1-5 வகுப்பு மாணவர்கள் 6-8 வகுப்பு மாணவர்கள் 9-10 வகுப்பு மாணவர்கள் மொத்தம்
1 துவக்கபள்ளி 1141 94763 0 0 94763
2 நடுநிலைப்பள்ளி 415 42059 35212 0 77271
3 உயர்நிலைப்பள்ளி 361 0 18596 17632 36228
4 மேல்நிலைப்பள்ளி 186 0 6068 8802 14870
5 ஆதிதிராவிடர் நலப்பள்ளி 97 5108 2035 953 8096
6 சிறுபான்மையினர் (இசுலாமியர் மற்றும் கிறித்தவர் ) 177 10852 8952 9726 29530
7 குழந்தை தொழிலாளர்கள் மையம் 39 0 815 0 815
மொத்தம் மையங்கள் மற்றும் பயனாளிகள் 2416 152782 71678 37113 261573

 

வேலூர் மாநகராட்சி/ அனைத்து நகராட்சிகள் / அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் விபரம் சத்துணவு மையங்கள் எண்ணிக்கை பள்ளி வருகை பதிவேட்டின் படி மாணக்கர்களின் எண்ணிக்கை பள்ளி வேலை நாட்களின் உணவு உண்ணும் மாணக்கர்களின் எண்ணிக்கை
ஊராட்சி ஒன்றியங்கள் 2257 321981 251103
மாநகராட்சிகள் / நகராட்சிகள் 120 11986 10470
குழந்தை தொழிலாளர்கள் மையம் 39 815 815
மொத்தம் 2416 334782 262388

 

சத்துணவுத்திட்டதிற்கென மாநில அரசால் உணவூட்டு மான்யங்கள், சமையலறை பழுதுபார்ப்பு பணிகள், புதிய சமையலறையுடன் கூடிய இருப்பறை கட்டிடங்கள் கட்டுதல், சத்துணவு மையங்களுக்கு தேவையான சமையல் உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய அரசால் தேசியத்திட்டம், கண்காணிப்பு, மேலாண்மை மற்றம் மதிப்பீடுகள் (MME) திட்டத்தின்கீழ் உட்கட்டமைப்பு வசதிகள், திட்டத்தினை பொதுமக்களிடம் கொண்டு செல்ல ஏதுவாக விளம்பரங்கள் மேற்கொள்ளுதல் (IEC), சத்துணவு பணியாளர்களுக்கு காலவாரியாக புத்தாக்க பயிற்சிகள் வழங்குதல் ஆகிய பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சத்துணவு மையங்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான, வட்டார அளவிலான அலுவலா்களுக்கு ஆய்வுப்பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சத்துணவுத்திட்டத்திற்காக கிராம அளவிலான குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுக் குழு, வட்டார, கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு சத்துணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது.

சத்துணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் கீழ்காணும் விபரப்படி பல்வகை கலவை சாதங்கள் மற்றும் மசாலா முட்டைகள் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்படுகிறது.

உணவு வகை பட்டியல் விபரம்

முதல் மற்றும் மூன்றாவது வாரம்

நாள் உணவு வகை
திங்கட் கிழமை வெஜிடேபிள் பிரியாணி + மிளகு முட்டை
செவ்வாய் கிழமை கொண்டைக்கடலை புலாவு + தக்காளி மசாலா முட்டை
புதன் கிழமை தக்காளி சாதம் + மிளகு முட்டை
வியாழக்கிழமை சாம்பார் சாதம் + சாதா முட்டை
வெள்ளிக் கிழமை கறிவேப்பிலை சாதம்/கீரை சாதம் + உருளைக்கிழங்கு தக்காளி சோ்த்து வேகவைத்த முட்டை

 

இரண்டாம் மற்றும் நான்காவது வாரம்

நாள் உணவு வகை
திங்கட் கிழமை பிசிபேளாபாத் + வெங்காயம், தக்காளி முட்டை மசாலா
செவ்வாய் கிழமை மிக்சர்ட் மீல் மேக்கர் (ம) காய்கறிகள் சாதம் + மிளகு முட்டை
புதன் கிழமை புளிசாதம் + தக்காளி மசாலா முட்டை
வியாழக்கிழமை எலுமிச்சம்பழ சாதம் + மசாலா முட்டை
வெள்ளிக் கிழமை சாம்பார் சாதம் + வேகவைத்த முட்டை/ வறுத்த உருளைக்கிழங்கு

 

  1. ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும் காய்கறி மற்றும் கீரை தோட்டம், முருங்கை, பப்பாளி, கருவேப்பிலை மரம் நடப்பட்டுள்ளது.
  2. சத்துணவு மையங்களையும் நவீனமையமாக்கும் பொருட்டு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
  3. புதியவகை கலவை சாதங்கள் மற்றும் மசாலா முட்டைகள் தயாரிப்பதற்கான பலவகை பொடிகள் தயாரிக்க மற்றும் இஞ்சி, பூண்டு அரைத்து சமையல் செய்ய அரவை இயந்திரங்கள் (மிக்ஸி மற்றும் கிரைண்டர்) வழங்கப்பட்டுள்ளது.
  4. பல்வகையான சாதங்களும், முட்டை வகைகளும் சமைத்து வழங்கப்படுவதினால் பள்ளிக்கு வருகைபுரியும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகமாவதுடன், உணவு வீணாவது தவிர்க்கப்படுகிறது.

அரசாணை நிலை எண் 101 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை நாள் 20.06.2007ன் படி இருமுறை செறியூட்டப்பட்ட உப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கீழ்காணும் நாட்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் வழங்கும் நாள் பிறந்தநாள்
2001 முதல் நாளது வரை அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாள் செப்டம்பா-15
 2001 முதல் நாளது வரை பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த நாள் சூலை-15
 2001 முதல் நாளது வரை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பிறந்த நாள் சனவரி-17