தேர்தல் பிரிவு
வேலூா் மாவட்டம்
அமைவிடம்
வேலூா் மாவட்டம், 6077 km² பரப்பளவு கொண்டது. இம்மாவட்டம் 12° 15’ முதல் 13° 15’ வரையிலான வட அட்சரேகை மற்றும் 78° 20’ முதல் 79° 50’ கிழக்கு தீா்க்கரேகைக்கு இடையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்திற்கு வடகிழக்கில் திருவள்ளுா் மாவட்டமும் தென் கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டமும் தெற்கில் திருவண்ணாமலை மாவட்டமும் தென் மேற்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும் வடக்கு மற்றும் வடமேற்கில் ஆந்திர மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
இம்மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் வேலூா் மற்றும் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியானது அண்டை மாவட்டமான திருவள்ளுா் மாவட்டத்தில் உள்ள திருத்தனி சட்டமன்ற தொகுதியையும் உள்ளடக்கியுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிகள் அண்டை மாவட்டமான திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.
e-version of SVEEP Manual Prepared by the ECI
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தோ்தல் – 2016