மூடவும்

முக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்

கங்கை அம்மன் திருவிழா

குடியாத்தம் நகரில் நடைபெறும் “கங்கை அம்மன் திருவிழா” , வேலூர் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க திருவிழாக்களில் ஒன்று. வைகாசி மாத பிறப்பையொட்டி நடை பெறும் இத்திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறையளிக்கப்படுகிறது.

 

புஷ்ப பல்லக்கு

சித்திரை பௌர்ணமி இரவில் வேலூர் நகரத்தை சேர்ந்த முக்கிய கோவில்களின் உற்சவ மூர்த்திகளின் ஊர்வலம் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்குகளில் நடைபெறுகுகிறது.