மூடவும்

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை

வருவாய் நிர்வாகம்

வருவாய்த் துறையானது ஆங்கிலேயர் காலத்தில் குடிமக்களிடமிருந்து வருவாய் வசூலிப்பதற்காகவும், பொதுமக்களுக்கு நீதி வழங்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டு, தற்போது ஒரு பெரும் துறையாக பரிணாமம் எடுத்துள்ளது. வருவாய்த் துறையானது மாவட்ட நிர்வாகத்தினை சிறப்புறக் கையாண்டு, பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து சேவைகளையும் புரிந்து, பெருவாரியான மக்களின் நல்வாழ்விற்கு அடித்தனமாக அமைந்துள்ளது.

வேலூர் மாவட்ட வருவாய் நிர்வாகம் கீழ்கண்ட சேவைகளை நோக்கமாகக் கொண்டுள்ளது –

  1. பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசால் வடிவமைக்கப்பட்ட திட்டங்களை திறம்பட செயல்படுத்தி. மக்களுக்கு அத்திட்டங்களை மக்களிடம் கொண்ட போய்ச் சேர்க்க ஒரு வடிகாலாக உள்ளது.
  2. அரசு நிலங்கள், நிலப்பதிவேடுகள் ஆகியவற்றின் பாதுகாவலனாகவும் நிலச்சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதிலும் முனைப்பாக உள்ளது.
  3. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, மக்களவை/மாநிலங்களவை மற்றும் சட்டசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
  4. பொதுமக்களுக்கும், மாவட்ட அளவிலான நிர்வாகத்திற்குமிடையே ஒரு பாலமாக விளங்குகிறது.
  5. இயற்கைச் சீற்றங்கள், இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுகின்ற பேரிடர்கள் மற்றும் இதர அவசர காலங்களில் ஏற்படும் நெருக்கடியின் போது, அவசர கால நிர்வாகத் தலைமையிடமாக விளங்குகளிது.
  6. சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதன் மூலம், வேலூர் மாவட்டத்தினை ஒரு பிழைத்து வாழும் இடமாக இல்லாமல், மக்கள் நிம்மதியாக வாழும் ஒரு இடமாக வைத்துள்ளது.
  7. நிலமாற்றம், நிலஉரிமை மாற்றம், பட்டா நிலங்களை ஆக்ரமணம் செய்தல் போன்ற பல்வேறு மேம்பாட்டுப் பணிகளிலும் வருவாய் நிர்வாகமானது முதன்மையாக செயல்படுகிறது.
  8. மிக முக்கிய பிரமுகா்கள் வருகையின் போது மாவட்ட நெறிமுறைகளைக் கடைபிடிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பொதுமக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, நெருக்கடி மற்றும் பதற்றமான சூழ்நிலைகளை எளிதாக்குவதில் குறிக்கோளாக விளங்கும் ஒரேதுறை, வருவாய்த் துறை மட்டுமேயாகும். முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளின் உதவித்தொகை, கைவிடப்பட்ட பெண்கள் உதவித்தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டம், பொது விநியோகத் திட்டம் போன்ற தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களையும் செவ்வனே செயல்படுத்துவது மட்டுமின்றி, மாறிவரும் தொழில்நுட்பங்களை ஏற்று நடைமுறைப்படுத்தியும், சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், போன்ற சான்றிதழ்களை இணைய வழியில் வழங்குவதன் மூலம் பொதுமக்கள் அரசு அலுவலகங்களை நாடும் நிலையை மாற்றி, அவர்களின் நேரத்தினை சேமிக்கவும், அலைச்சலை தவிர்க்கவும் வழிவகை செய்துள்ளது. பொதுமக்களின் பிறப்பு, இறப்பினை பதிவு செய்தல் வாரிசுச் சான்று வழங்குதல், பட்டா வழங்குதல், அரசு விதிமுறைகளின்படி நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குதல் போன்ற பணிகளிலும் முனைப்புடன் ஈடுபடுகிறது. மனிதனால் மற்றும் இயற்கையால் ஏற்படக்கூடிய பேரிடர்களின் போது, உணவு, தக்க பாதுகாப்பிடம் மற்றும் உடனடி நிவாரண உதவிகள் வழங்கி மாவட்ட அளவில் மிக முக்கியப் பங்காற்றுகிறது.

தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிரந்து வெளிவரும் விலங்குக் கழிவுகளை நீக்குதல், கழிவு நீரை சுத்திகரித்தல் ஆகியவற்றின் மூலம் வேலூா் மாவட்டத்தினை ஒரு மாசில்லா மாவட்டமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாகநதி திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி, வேலூா் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை போக்க தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்கள் தங்களின் சிட்டா, பட்டா மற்றும் வில்லங்கச்சான்றிதழ்களை இணைய வழியில் பெற்றுக் கொள்ள இயலுகிறது. மேலும் நிலத்திட்ட வரைபடங்கள் கணினிமயமாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறாக, வருவாய்த் துறையானது பொது நிர்வாகத்திற்காக மட்டுமல்லாமல், மாவட்டத்தின் வளர்ச்சியிலும் பெரிதும் உறுதுணையாக உள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையின் கீழ் வேலூா் மாவட்ட நிர்வாகம் கீழ்கண்ட துறைகளை உள்ளடக்கியதாக விளங்குகிறது.

துறைகள் துறையின் தலைமை
வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் துறை மாவட்ட வருவாய் அலுவலர்
காவல் துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஊரக வளர்ச்சித் துறை திட்ட அலுவலர்
பதிவுத் துறை மாவட்ட பதிவாளர்
நிலஅளவை, நிலப்பதிவேடு பராமரிப்பு உதவி இயக்குநர் (நிலஅளவை)
வேளாண்மை இணை இயக்குநர் (வேளாண்மை)
கூட்டுறவு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்
மருத்துவம் மாவட்ட மருத்துவ அலுவலர்
பொது நலம் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)
வேலைவாய்ப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்
சமூக நலம் மாவட்ட சமூக நல அலுவலர்
விளையாட்டு மாவட்ட விளையாட்டு அலுவலர்
முன்னாள் இராணுவனத்தினர் நலம் உதவி இயக்குநர் (முன்னாள் இராணுவத்தினர் நலம்)
உயர்கல்வி மண்டல இணை இயக்குநர் (உயர்கல்வி)
பள்ளிக் கல்வி முதன்மை கல்வி அலுவலர்
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி மாவட்ட தீயணைப்பு அலுவலர்
வனம் வனப்பாதுகாவலர்
பொதுப்பணித் துறை செயற்பொறியாளர்
போக்குவரத்து மண்டல போக்குவரத்து அலுவலர்
கலால் உதவி ஆணையர் (கலால்)
கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் (கால்நடை)
மீன்வளம் உதவி இயக்குநர் (மீன்வளம்)
தொழிற்சாலைகள் தொழிற்சாலை ஆய்வாளர்
தொழிலாளர் நலம் தொழிலாளர் ஆய்வாளர்
மாநகராட்சி மாநகராட்சி ஆணையர்
நகராட்சி நிர்வாகம் நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குநர்
பேரூராட்சிகள் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)

வேலூா் மாவட்டமானது, மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்களின் தலைமையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகமானது வருவாய்த் துறையினை பொருத்தமட்டில் மாவட்ட அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையின் கீழ் செயல்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையின் கீழ் 6 துணை ஆட்சியர்கள் பணியாற்றுகின்றனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் பொது நிர்வாகத்தையும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அவர்கள் வருவாய் நிர்வாகத்தைச் சார்ந்த கணக்குகளையும், தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) அவர்கள் முத்திரைக் கட்டண வசூலையும், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அவர்கள் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை, கைவிடப்பட்ட பெண்கள் உதவித் தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டம் போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்துதல், கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அவர்கள் நிலஆர்ஜிதம், நிலமாற்றம், நில உரிமைமாற்றம், ஆக்ரமணம், ஆக்ரமணம் அகற்றுதல் ஆகிய பணிகளையும், உதவி ஆணையர் (கலால்) அவர்கள் கலால் மற்றும் மதுவிலக்கு ஆகிய பணிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் திட்டங்களை செயல்படுத்துதல், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்களை செயல்படுத்துதல் ஆகிய பணிகளை நிறைவேற்றுகின்றனர். இதுமட்டுமின்றி தமிழ்நாடு மாநில விற்பனைக்குழ (TASMAC)-ஐ நிர்வகிக்க இரண்ட துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வேலூா் மாவட்ட நிர்வாகக் காரணங்களுக்காக, வேலூா், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்துர் ஆகிய மூன்று கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கோட்டங்கள் 13 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டமும் சிறிய மாவட்டம் (Miniature District) என அழைக்கப்பட்டு, பொதுமக்களின் தங்கள் வேலைக்காக எளிதில் அணுகும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வேலைக்காக எளிதில் அணுகும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வட்டங்கள் 53 குறுவட்டங்களாக வருவாய் ஆய்வாளரின் தலைமையின் கீழ் செயல்படுகின்றது. ஒவ்வொரு வட்டமும் 10 முதல் 15 வரையிலான கிராமங்களை உள்ளடக்கியது. இந்த குறுவட்டங்கள் 842 கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலருக்கும் ஒரு கிராம உதவியாளர் உறுதுணையாக செயல்படுகிறார். இவர்கள் கிராம நிர்வாகத்தை செவ்வனே செயல்பட உறுதுணையாக உள்ளனர்.

இவ்வாறாக வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறையானது மாவட்ட நிர்வாகத்தின் முதுகெலும்பாக செயல்படுகிறது.

பேரிடர் மேலாண்மை

மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை,

பேரிடர் மேலாண்மை கையேடு – 2017, வேலூர் மாவட்டம்.

பேரிடர் மேலாண்மை பிரிவு – மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்

வேலூர் மாவட்டம்.

கட்டணமில்லா தொலைபேசி எண் – 1077

வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை ) – 9384056214

தொலைபேசி எண் – 0416 – 2258016

நிகரி தெலைபேசி எண் – 0416 – 2253034

மாவட்ட ஆட்சியரின நேர்முக உதவியாளர் (பொது) – 0416 – 2252501

நிகரி தொலைபேசி எண்- 0416- 2253034

கைபேசி எண்.9445008159

பிறதுறைகளின் பங்களிப்புகள் (51.5KB)

பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் (530 KB)

தனியார் மருத்துவமனைகள் (88.2KB)