கருவூலம் மற்றும் கணக்கு துறை
கருவூலம் மற்றும் கணக்கு துறை – மாவட்ட கருவூலம் வேலூர்
கருவூலம் மற்றும் கணக்கு துறை 1962 ஆம் ஆண்டு முதல் நிதித் துறையின் கீழ் தொடங்கப்பட்டு தனித்துறையாக செயல்பட்டு வருகின்றது. ஆரம்ப காலத்தில் இத்துறையானது வருவாய்துறையின் கீழ் செயல்பட்டு வந்தது. கருவூலத்துறைக்கென தனியாக இயக்குநரகம் தொடங்கப்பட்டு அனைத்து மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் மற்றும் சம்பள கணக்கு அலுவலகங்கள் கருவூலம் மற்றும் கணக்கு துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு நிதித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றது.
பணிகள் மற்றும் சேவைகள் ( FUNCTIONS & SERVICES)
வங்கிகள் மூலம் கருவூல பரிவர்த்தனை
கருவூலமானது அரசின் வங்கியாக செயல்பட்டு அரசின் அனைத்து வரவு மற்றும் செலவினங்களை மேற்கொள்கின்றது. அனைத்து பாரிவர்தனைகளும் வங்கிகள் .(ELECTRONIC CLEARING SYSTEM) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கணக்குகள்
கருவூலம் மற்றும் கணக்கு துறை மூலம் மாவட்ட அளவில் அனைத்து துறைகளின் வரவு மற்றும் செலவினைகளின் கணக்குகளைத் தொகுத்து மாதம்தோறும் சென்னை மாநில கணக்காயர் அவர்களுக்கு அனுப்பப்படுகின்றது.
ஓய்வூதியம்
அனைத்து துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுவது மற்றும் ஓய்வு கால பணப்பயன்கள் வழங்குவது கருவூலத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். தமிழக அரசு மட்டுமின்றி மற்ற மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் கருவூலம் மூலம் வழங்கபடுகின்றது. இவை தவிர தமிழ் பண்டிதர்கள் ஓய்வூதியம், கலை மற்றும் பண்பாடு ஓய்வூதியம், எல்லை காவலர் ஓய்வூதியம், சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் மற்றும் பல இனங்களைச் சார்ந்த ஓய்வூதியகளும் கருவூலம் மூலம் அனுப்பப்படுகின்றது.
ஓய்வூதியர் நேர்காணல்
ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும் ஆண்டுக்கு ஒருமுறை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நேரில் நேர்காணலுக்கு வரவேண்டும். 270 மையங்களில் (31 மாவட்ட கருவூலங்கள், 238 சார் கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகங்கள் ) இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் வசதியாக ஓய்வூதியர்கள் மத்திய அரசின் ”ஜீவன் பிரமான்” வலைத்தளம் மூலம் கருவூலத்திற்கு வராமல் அரசின் இ-சேவா மையம் மூலம் வருடாந்திர நேர்காணலுக்கான வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கலாம்.
ஒய்வூதியர்களுக்கு அடையாள அட்டை
ஓய்வூதியர்கள், தமிழ் நாட்டில் உள்ள 539 அரசு மையங்கள் மூலம் ரூ.30 /- செலுத்தி தங்களுக்கான அடையாள அட்டையினை பெற்று கொள்ளலாம்.
புதிய மருத்துவ காப்பீடு திட்டம்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தகுதியான ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விதிகளின் படி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மருத்துவ சலுகைகள் துய்க்கலாம்.
வைப்பு நிதிகள்
கருவூலத்தில் அரசு அலுவலகங்களைச் சார்ந்த வைப்பு நிதிகளான சிவில் நீதிமன்ற வைப்பீடு கணக்குகள்,கிரிமினல் நீதிமன்ற வைப்பீடு கணக்குகள்,தன் வைப்பு நிதிகள் கணக்குகள்,உள்ளாட்சி நிதி கணக்குகள் மற்றும் தல நிதி கணக்குகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
முத்திரை தாள்
கருவூலகணக்கு துறை மூலம் நீதி மற்றும் நீதி சாரா முத்திரைத்தாட்கள்,வில்லைகள் உரிமம் பெற்ற முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது. அனைத்து நீதி மற்றும் நீதி சாரா முத்திரைத்தாட்கள், வில்லைகள் அனைத்தும் சென்னை மாவட்ட கருவூலம் மூலமாக அனைத்து மைய மாவட்ட (Nodal Office) கருவூலங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றது. மைய மாவட்ட (Nodal Office) கருவூலங்கள் மற்ற மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு உரிமம் பெற்ற முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது.
மாவட்ட கருவூலம் வேலூரானது நீதி மற்றும் நீதி சாரா முத்திரைத்தாட்கள்,மற்றும் வில்லைகள் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யும் மைய கருவூலமாக (Nodal Office) செயல்பட்டு வருகின்றது.
கருவூலத்தின் காப்பறையில் அரசின் அனைத்து துறையினை சார்ந்த முக்கியமான சேம பாதுகாப்பு பொருட்கள் பராமரிக்கப்படுகின்றது.
கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் வலைதள முகவரி
http://www.tn.gov.in/karuvoolam
தகவல் அறியும் உரிமைச்சட்டம்
பொது தகவல் அதிகாரி
கருவூல அலுவலர்,
மாவட்ட கருவூலம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
பி பிளாக், முதல் தளம்,
சத்துவாச்சாரி,
வேலூர்-632009
0416-2253106,2254106
e-mail –id – dtovlr.tndta@nic.in
மேல் முறையீட்டு அலுவலர்
மண்டல இணை இயக்குநர்,
கருவூல கணக்குத் துறை,
கூட்டுறவு சங்க கட்டிடம்,
பாரதியார் சாலை,
வேலூர் -632009
0416-224106
e-mail – id – rjdvlr.tndta@nic.in