காணத்தக்க இடங்கள்
மார்க்கபந்தீஸ்வரர் கோயில் – விரிஞ்சிபுரம்

வேலூரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது. சுவாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக, சாய்ந்த மகா லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியகதிர்கள் விழுகின்றன. இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இது கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ளது. இங்கு சிங்கமுக வடிவத்தில் ஒரு குளம் உள்ளது. இதனைச் சிம்ம தீர்த்தம் என்று அழைக்கின்றனர். கார்த்திகை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் இக்குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்வது சிறப்பாகும்.
முருகன் கோயில் – வள்ளிமலை

வேலூரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது. பல்லவ கால குடவரைக் கோயிலாகும். சுமார் 400 படிக்கட்டுகள் உள்ளன. வள்ளி பிறந்த தலமாகும் மற்றும் முருகனை திருமணம் செய்த தலமாகும்.