கிருபானந்த வாரியார் நினைவிடம் - காங்கேயநல்லூர்

வகை மதம் சார்ந்த

இது வேலூரிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள கங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்தவாரியர் நினைவிடம் அமைந்துள்ளது. திருமுருக கிருபானந்த வாரியார்  (25 ஆகஸ்டு 1906 – 7 நவம்பர் 1993) சிறந்த முருக பக்தர் ஆவார். இவர் ஆன்மீக  சொற்பொழிவுகளை நிகழ்த்துவது,  சமயம்,  இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன்,  இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். 2021 ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் வருகிறது.

நேரம் : காலை 6.00 முதல் மதியம் 12.00 மாலை 4.00 முதல் இரவு 9.00 வரை

அடைவது எப்படி:

சாலை வழியாக

வேலூர் நகரில் இருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் உள்ளது