மூடவும்

வேலூர் கோட்டை

வேலூர் கோட்டை 16-ஆம் நூற்றாண்டில் பொம்மி நாயக்கரால் (விஜயநகர பேரரசு) கட்டப்பட்ட கோட்டையாகும்.

அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையச் சுற்றிலும் அமைந்துள்ளது. இக்கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோயில், தேவாலயம், பள்ளிவாசல், அரசு அருங்காட்சியகம் உள்ளது. நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும் பின்னர் மராட்டியருக்கும் தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரிட்டிஷாருக்கும் இக்கோட்டை கைமாறியது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும்வரை இக்கோட்டை பிரிட்டிஷார்களிடமே இருந்தது. பிரிட்டிஷார் காலத்தில் இக்கோட்டையிலேயே திப்பு சுல்தான் குடும்பத்தினர் மற்றும் இலங்கையின் கண்டியரசின் கடைசி தமிழ் மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் சிறை வைக்கப்பட்டனர். பிரிட்டிஷாருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி சிப்பாய்கலகம் இக்கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது. கோட்டையில் திப்புமஹால், ஹைதர்மஹால், கண்டிமஹால், ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், மசூதி கோட்டையின் உட்புறத்தில் அமைந்துள்ளது.

வேலூர் அரசு அருங்காட்சியகம் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் நாளில் இருந்து வேலூர் கோட்டைக்குள் இயங்கி வருகிறது.

புகைப்பட தொகுப்பு

  • வேலூர் கோட்டை
  • ஜலகண்டேஸ்வரர் கோவில்
  • புனித ஜான் தேவாலயம்

அடைவது எப்படி:

வான் வழியாக

பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானநிலையம் சென்னை- 135 கி.மீ.

தொடர்வண்டி வழியாக

காட்பாடி புகை வண்டி நிலையம்

சாலை வழியாக

புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் சென்னை - பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை