முருகன் ஆலயம் மற்றும் சமணர் குகை, வள்ளிமலை
வகை
மதம் சார்ந்த, வரலாற்று சிறப்புமிக்கது
வேலூரிலிருந்து சுமார் 33 கி.மீ தொலைவில் காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து, சோளிங்கர் – திருத்தணி செல்லும் வழித்தடத்தில் 25 கி.மீ தூரத்திலும், இராணிப்போட்டையிலிருந்து, பொன்னை செல்லும் வழித்தடத்தில் 22 கி.மீ தூரத்திலும் வள்ளிமலை உள்ளது. இக்கோயில் குடவரை குகை கோயிலாகும். இந்த திருகோயில் இந்து சமய அறநிலையங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் 444 படிக்கட்டுகள் கொண்ட சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. இக்கோயில் இந்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நேரம் : காலை 7.30 முதல் மாலை 6.00 வரை
அடைவது எப்படி
சாலை வழியாக
வேலூர் நகரில் இருந்து சுமார் 33 கி.மீ தூரத்தில் உள்ளது