மூடவும்

கால்நடை பராமரிப்புத்துறை

அலுவலக அமைப்பு

கால்நடை பராமரிப்புத்துறை – வேலூா் மண்டலம்

துறையின் செயல்பாடுகள் ஒரு கண்ணோட்டம்

  • வேலூா் மண்டலத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதாரத்தையும் உயா்த்த இத்துறையின் பங்கு இன்றியமையாததாகும்.
  • செயற்கைமுறை கருவூட்டல் பணிக்காக அயலின பொலிக்காளைகளின் மூலம் விந்தணுக்கள் பெறப்பட்டு, அதனை பதப்படுத்தி உறைய வைத்து, மண்டலத்திலுள்ள 163 கால்நடை நிலையங்களில் செயற்கைமுறை கருவூட்டல் பணி நடைபெற்று வருகிறது.
  • கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு உறைவிந்துக் குச்சி 1க்கு ரூ.10- விலையில் இவற்றினை கறவைப் பசுக்களுக்கு செலுத்தி அதன் மூலம் கலப்பின கிடேரிக் கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மாதம் 1க்கு சுமார் 3.00 இலட்சத்திற்கு மேல் இப்பணி நடைபெற்று வருகிறது. தரமான கலப்பின பசுக்களிலிருந்து தரமான பால் பெறப்படுகிறது.
  • கால்நடை வளா்க்கும் விவசாயிகளின் சொந்த நிலத்தில் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவன உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவா்களுக்கு இலவச முளைப்புத்திறன் உள்ள தரச்சான்று பெற்ற விதைகள் வழங்கப்படுகிறது. வளா்ந்த புல்லினை வெட்ட மின்சாரத்தினால் இயங்கக் கூடிய புல்வெட்டும் கருவி மானிய விலையில் வாங்கி வழங்கப்படுகிறது.
  • கால்நடைகளுக்கு தேவையான தாதுஉப்புக்கள் வழங்கப்படுகிறது.
  • அனைத்து கால்நடை நிலையங்களிலும் அனைத்து தடுப்பூசி பணிகளும், சிறிய மற்றும் பெரிய அறுவை சிகிச்சைப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

 

இத்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள்

  • விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம்
  • விலையில்லா ஆடு வழங்கும் திட்டம்
  • கோமாரி நோய் தடுப்பூசி திட்டம்
  • கால்நடை காப்பீட்டுத் திட்டம்
  • கால்நடை பாதுகாப்புத் திட்டம்
  • கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டம்
  • தேசிய கால்நடை நோய் தகவல் தெரிவிக்கும் திட்டம்
  • நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டம்
  • கறிக்கோழி வளா்ப்புத் திட்டம்
  • ஊரக புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டம்
  • தரிசுநில மேம்பாட்டுத் திட்டம்
  • மாநில தீவன அபிவிருத்தித் திட்டம்
  • மானாவாரி
  • இறவை
  • நீா்த்தெளிப்பான்
  • புல்வெட்டும் கருவி
  • நீா்ப்பாசி
  • மண்ணில்லா விவசாயம்
  • வறட்சிக் கால மானிய விலை உலா்தீவன விற்பனை மையங்கள்
  • சிறிய அளவிலான பால் பண்ணைகள் அமைக்கும் திட்டம்
  • கிராமப்புற இளைஞா்களுக்கான செயற்கைமுறை கருவூட்டல் பயிற்சி
  • மனந்திருந்திய மதுவிலக்கு குற்றவாளிகளுக்கு கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம்
  • பழங்குடியினா் நலத் திட்டத்தின்கீழ் கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம்
  • எருதுவிடும் விழா
  • நாய்க் கண்காட்சி
  • அரசுப் பொருட்காட்சி

கால்நடை பராமரிப்புத்துறை    (PDF 3.6 MB)

 

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, வேலூா் மண்டலத்தில் இத்துறை குறித்தான தகவல் பெற அணுக வேண்டிய முகவரி

பொதுத் தகவல் அலுவலா் – மண்டல இணை இயக்குநா்
கால்நடை பராமரிப்புத் துறை,
கால்நடை பெருமருத்துவமனை வளாகம்,
வேலூா்-632 004.