தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்
வ. எண் | வரலாற்றுச் சின்னத்தின் பெயர் | அமைவிடம் |
---|---|---|
1 | கண்டி மன்னர் கல்லறை | வேலூர் |
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் வேலூா் மாவட்டத்தில் பாதுகாக்கப்படும் தொல்லியல் சின்னங்கள்
கண்டி மன்னர் கல்லறை
இலங்கையில் கடைசியாக ஆட்சி செய்த தமிழ் மன்னனான விக்கிரம சிங்க ராஜ மன்னனின் கல்லறை கண்டி மன்னன் கல்லறை என அழைக்கப்படுகிறது. இந்நினைவுச் சின்னம் வேலூாில் உள்ள பாலாற்றங்கரையில் புதிய பேருந்து நிலையத்திற்கு மேற்கே சுமாா் 150 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அது தற்பொழுது மக்களால் முத்து மண்டபம் என அழைக்கப்படுகிறது.
இலங்கையின் கண்டியை ஆட்சி செய்த ராஜாதிராஜனுக்கு வாரிசில்லாமல் போகவே அவருக்குப்பின் அவரது மனைவியின் தம்பியான கண்ணுசாமி தமது 18வது வயதில் விக்கிரம ராஜசிங்கன் என்ற பட்டப் பெயருடன் கண்டி மன்னராக்கப்பட்டார்.
விக்கிரமராஜசிங்கன் 26 ஆண்டுகள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டான். ஆயினும் இறுதியில் பரங்கியர் படை வென்றதால் மன்னனும் அவனது குடும்பத்தினரும் அரண்மனையைவிட்டு வெளியேறியும், அவா்களை ஆங்கிலேயர் சிறைபிடித்து கண்டியில் இருந்தால் மன்னருக்கு மக்களின் ஆதரவு பெருகும் என பயந்து மன்னரையும் அவரது குடும்பத்தினரையும் வேலூருக்கு நாடு கடத்தி 8-3-1816 முதல் வேலூா் கோட்டையில் அவர்களைச் சிறைவைத்தனா். 16 ஆண்டு கால சிறைவாசத்திற்கு பிறகு விக்கிரம சிங்க ராஜா 31-1-1832-ல் மரணம் எய்தினார். அவரது உடல் பாலாற்றங்கரையில் புதைக்கப்பட்டது. அவருக்கு அருகிலேயே அவரது உறவினர்களின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது. இதுவே கண்டி மன்னர் கல்லறையாகும்.
புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கே சொடுக்கவும்