மூடவும்

தோட்டக்கலைத் துறை

அனைத்து தோட்டக்கலை பயிர்களையும் சாகுபடி செய்ய உகந்த தட்ப வெப்பநிலை கொண்டது வேலூர் மாவட்டமாகும். மேலும் தோட்டக்கலைப்பயிர்கள் சுமார் 25200 ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் பழங்கள் சுமார் 17495 ஹெக்டரிலும் மற்றும் மலர் வகைகள் 115 ஹெக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டத்தின் நிகரசாகுபடி பரப்பில் தோட்டக்கலைப்பயிர்களின் மொத்த சாகுபடி பரப்பு 15 சதவீதமாகும். இதில் 60% பரப்பு மானாவரி பகுதியாகவும் மீதி பரப்பு கிணறு, கால்வாய் நீர் தொட்டிகள் மூலம் பாசனம் பெறும் வகையிலும் அமைந்துள்ளது. மானாவரி பகுதி மேம்பாடு மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் தோட்டக்கலை பயிர் சாகுபடியை மேம்படுத்த தோட்டக்கலை துறையின் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பயிர்களின் பரப்பினை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அத்திட்டங்கள் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

தேசிய தோட்டக்கலை திட்டம்

இத்திட்டத்தின் மூலம் மா, திசுவாழை, பப்பாளி, மலர்கள் மற்றும் மிளகாய்பயிர் செய்யும் பரப்பினை கூடுதலாக்க விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டி அவர்களுக்கு மான்யவிலையில் நடவுபொருட்கள் தொழு உரம், பூச்சி கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பசுமைக்குடில் மற்றும் நிழல்வலைக்குடில் மூலம் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யகடந்த 3 வருடங்களாக விவசாயிகளுக்கு மான்யம் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதுவரை 40000 ச.மீ பரப்பில் பசுமைகுடிலும் 35000 ச.மீ பரப்பில் நிழல்வலைகுடில்களும் இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இயந்திர மயமாக்கல் திட்டத்தின்கீழ் டிராக்டர், பவர்டில்லர்மற்றும் பயிர்காப்பு உபகரணங்கள் 50% மானியம் விலையில் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் விநியோகிக்கபடுகிறது. 2017-18 ஆம் ஆண்டில் புதிய பரப்பு அதிகரித்தல் மூலம் 140 ஹெக்டரில் காய்கறிகளும் 40 ஹெக்டர் பரப்பில் மா-செடிகளும் நடவு செய்யப்பட்டு உள்ளது.

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்

இத்திட்டத்தின் கீழ் பாரம்பரிய காய்கறி வகைகள் மற்றும் மலை வாழை பயிரிட சிறு மற்றும் குறு விவசாயிகள் 50% மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. காய்கறி சிறுதலைகள் மற்றும் மூலிகைதோட்டம் அமைக்க 40%மானிய வழங்கப்பட்டு வருகிறது. மேலும்இத்திட்டம் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தேசிய நுண்நீர் பாசன திட்டம்

இத்திட்டதில் தோட்டகலை மற்றும் வேளாண் பயிர்களுக்கு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 75% மற்றும் 100% மானியம் வழங்கப்பட்டு வருகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்கு 100% மானியமும் இதர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கர் வரை மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆம் ஆண்டு 2300ஹெக்டர்குரூ15.08 கோடி இலக்கீடு வரபெற்று பணிகள் நடைபெற்று வருகிறது.

மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டம்

இத்திட்டதில் ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய வீரிய ரக காய்கறிகள் மற்றும் பழச்செடிகள் ஒரு ஹெக்டருக்கு ரூ 25000/- மானியத்தில் வழங்கபடுகிறது. 2017-18 ஆம் ஆண்டு 90 ஹெக்டர் பரப்பில் இத்திட்டம் குடியாத்தம், திமிரி, அரக்கோணம், நெமிலி மற்றும் காட்பாடி வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது.

பாரம்பரிய வேளாண் வளர்ச்சிதிட்டம்

ஆலங்காயம் மற்றும் மாதனூர் வட்டாரங்களில் இத்திட்டம் 50 ஏக்கர் பரப்பில் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வட்டாரங்களிலும் 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு இயற்கை முறை விவசாயத்திற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கை இடுபொருட்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மண்புழு உரப்படுக்கை அமைக்கவும், பஞ்சகாவ்யா மற்றும் வேப்ப எண்ணெய் கரைசல் தயாரிக்க தேவையான இடுபொருட்கள் வாங்கவும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய பயிர் காப்பிட்டு திட்டம்

இத்திட்டத்தில் வறட்சி மற்றும் மழை போன்ற இயற்கை சீற்றத்தால் மகசூல் பாதிக்கப்படும் பயிர் அறுவடை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மகசூல் கணக்கிடப்பட்டு 5 ஆண்டு சாராசரி மகசூலுடன் ஒப்பிட்டு மகசூல் குறைவிற்கு இழப்பீடு வழங்கப்படும். கரிப் மற்றும் ரபி பருவ காலங்களில் பயிர் பாதுகாப்பு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட பயிர்களுக்கு மற்றும் அறிவிக்கப்பட்ட கிராமங்களுக்கும் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது.

அரசு தோட்டக்கலை பண்ணை:

மூன்று அரசு தோட்டக்கலை பண்ணைகள் இம்மாவட்டதில் செயல்பட்டு வருகின்றன. அவை

1. நவ்லாக் எனும் பண்ணை இராணிப்பேட்டை அருகிலும்
2. கூடப்பட்டு எனும் பண்ணை திருப்பத்தூருக்கு அருகிலும்
3. தகரகுப்பம் எனும் பண்ணை ஆலங்காயத்துக்கு அருகிலும் உள்ளது.

இப்பண்ணைகளில் மா, கொய்யா, பப்பாளி, சப்போட்டா போன்ற பழ செடிகள் மற்றும் பிளாஸ்டிக்குழித்தட்டுகளில் காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு அரசுதிட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் அடுத்துள்ள மாவட்டங்களுக்கும் இப்பண்ணைகள் மூலம் செடிகள் மற்றும் நாற்றுக்கள் விநியோகம் செய்யபடுகிறது.

துறையின் பெயர்:

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

அலுவலகம் முகவரி:

தோட்டக்கலை துணை இயக்குநர்,
இரண்டாவது தளம்,
வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாகம்,
வேலூர்.

அலுவலர்கள் தொடர்பு எண்கள்:
தோட்டக்கலை துணை இயக்குநர்:
திருமதி.S.S.பொன்னு – 9442312999 :
அலுவலகம்- 0416 2263530