வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்
வேலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்
வேலூர் மாவட்டத்தில், வேலூர, இராணிப்பேட்டை, மற்றும் வாணியம்பாடி ஆகிய 3 வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களும; மற்றும் வேலூர்; வட்டாரப்போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் குடியாத்தத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், ஆந்திரா எல்லையில் காட்பாடி மற்றும் சேர்காடு பகுதிகளில் இரு சோதனை சாவடிகளும் இராணிப்பேட்டை வட்டாரபோக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் அரக்கோணத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகKம், வாணியம்பாடி வட்டாரப்போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் ஆகிய இரு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களும; பொதுமக்களின் வசதிக்காக இயங்கி வருகின்றன.
இவ்வலுவலகங்களின் கட்டுப்பாட்டில் சுமார் 46,475 போக்குவரத்து வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 6,400 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.மேலும் ஒரு மாதத்தில் சுமார் 4,800 ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. மேற்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டிடத்திலேயே ஓட்டுநர் தேர்வுத் தளம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முறையாக தேர்வு நடத்தி தகுதியுள்ளவார்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கீழ்க்காணும் பணிகள் இவ்வலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன:
- பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் போன்றவை வழங்குதல்.
- இயங்கு ஊர்திகளின், பதிவு மற்றும் புதுப்பித்தல் சான்று வழங்குதல்.
- தகுதிச் சான்று வழங்கல் மற்றும் தகுதிச் சான்று புதுப்பித்தல் போன்றவை.
- லாரிகளுக்கு தேசிய அனுமதி,சரக்கு வாகன அனுமதி, ஒப்பந்த ஊர்தி அனுமதி (சுற்றுலா ஊர்தி , வாடகை ஊர்தி, ஆட்டோ ரிக்சா, ஷேர் ஆட்டோ போன்றவை), கல்வி நிறுவன பேருந்துகள், தனியார் பணி வாகனங்கள், போன்றவைகளுக்கு அனுமதி வழங்குதல்.
- சாலை பாதுகாப்பு மற்றும் இதர குற்றங்கள் தொடர்பாக அனைத்து வகை போக்குவரத்து வாகனங்களையும் ஆய்வு செய்தல் மற்றும் உரிய அபராதம் வசூலித்தல்.
- அபாயகரமாக விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்கள்,அதிவேகமாக வாகனம் ஓட்டபவர்கள், குடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுபவர்கள் மற்றும் போக்குகூரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களின் மீது நடவடிக்கை எடுத்தல்.
- ஒவ்வொரு வருடமும், பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடுதல்.
- மாசு பரிசோதனை மையம், அவசர விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தல் போன்றவை.
சேவைகளை பெறுவதற்கான நடைமுறைகள் :
- ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் நடத்துநர் உரிமங்கள் – http://parivahan.gov.in/parivahan/
- புதிய வாகனப்பதிவு, நடப்புப்பதிவு எண் மற்றும் அலுவலக எல்லை – http://tnsta.gov.in/transport/
- வாகனங்களுக்கான வரி விகிதம், அலுவலக படிவங்கள் தரவிறக்கம் – http://tn.gov.in/sta/
தொடர்பு விபரம்:
பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், வேலுர் | 0416 – 2252040 | Rtotn23[at]nic[dot]in | வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் வேலூர்,எண்.482 பேஸ்-II, டி.எண்.எச்.பி. சத்துவாச்சாரி, வேலூர் 632009. |
காட்பாடி சோதனைச் சாவடி | 0416-2295549 | katpadirtocp@gamail.com | மோட்டார் வாகன ஆய்வாளர்(தொ.நு.அ) வேலூர் சித்தூர் மேயின் ரோடு, மோட்டுக்குளும் காட்பாடி, வேலூர் 632059 |
சேர்க்காடு சோதனைச்சாவடி | 0416-2274355 | serkadurtocp@gmail.com | மோட்டார் வாகன ஆய்வாளர் (தொ.நு.அ), வள்ளிமலை கூட்டுரோடு, சேர்காடு, வேலூர் 632115 |
மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1, பகுதி அலுவலகம், குடியாத்தம். |
04324 – 225200 | Rtotn23z[at]nic[dot]in | மோட்டார் வாகன ஆயவாளர் நிலை-1,பகுதி அலுவலகம், பாலிடெக்னிக் கூட்ரோடு, குடியாத்தம், வேலூர்-632002 |
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இராணிப்பேட்டை | 04172-273087 | Rtotn73[at]nic[dot]in | வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், தேசிய நேடுஞ்சாலை-4, பாரதிநகர், இராணிப்பேட்டை |
மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1, பகுதி அலுவலகம், அரக்கோணம். | 04177-236700 | Rtotn73z[at]nic[dot]in | மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1,பகுதி அலுவலகம, அரக்கோணம், எண்.45/48ஏ, வள்ளலார் தெரு, ஜோதி நகர், அரக்கோணம்-631001, வேலுர். |
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், வாணியம்பாடி | 04324 – 288477 | Rtotn83[at]nic[dot]in | வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், திருப்பத்தூர் சாலை, ஜெயின் மகளிர் கல்லூரி எதிரில், சின்னவேப்பம்பட்டு வழி, வாணியம்பாடி-635751, வேலூர். |
மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1, பகுதி அலுவலகம், ஆம்பூர். | 04174-247615 | Rtotn83y[at]nic[dot]in | மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1, பகுதி அலுவலகம். எண் 78/1, எம் சி ரோடு, ஒரியண்டல் பள்ளி எதிரில், ஆம்பூர். |
மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1, பகுதி அலுவலகம், திருப்பத்தூர் | 04179-227797 | Rtotn83z[at]nic[dot]in | மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1, பகுதி அலுவலகம், முகுநதன் தெரு, வீட்டுவசதி வாரியகுடியிருப்பு, திருப்பத்தூர். |
சாலை பாதுகாப்பு :
- பழகுநர் உரிமம் பெறுவதற்காக வருகின்ற அனைத்து மனுதாரர்களுக்கும் சாலையில் பயன்படுத்தப்படும் சிக்னல்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து விபரமாக பயிற்சிகள் நடத்தப்படுகிறது. பிறகு கணினி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது, அதில் தேர்ச்சியடைந்த பின்னரே பழகுநர் உரிமம் வழங்கப்படுகிறது.
- சாலையில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான சிக்னல்கள; சம்மந்தமாக தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
- ஓவ்வொரு ஆண்டும் சனவரி 1ந் தேதி முதல் 7 வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா போக்குவரத்து துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் கீழ்க்கண்டவாறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
- ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை தேர்ந்த மருத்துவர்கள் மூலம் நடத்தப்படுகிறது.
- சாலை பாதுகாப்பு விளக்க மற்றும் விழிப்புணர்வு பேரணி துண்டு பிரசுரங்கள் விநியோகம் – அதிக வேகம், அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
- மாசுகட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து அதிக ஒளி வீசும் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களை தணிக்கை செய்தல்.
- பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
- தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிலையங்களில் போக்குவரத்து விதிகள் குறித்து அறிவிப்பு பலகைகள் பொறுத்தப்பட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005
போக்குவரத்து துறையில் தகவல் வழங்கும அலுவலர்
அலுவலகத்தின் பெயர் | தகவல் வழங்கும் அலுவலர் பெயர் | மேல் முறையிட்டு அலுவலர் |
---|---|---|
வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், வேலூர் | நேர்முக உதவியாளர் | வட்டாரப் போக்குவரத்து அலுவலர் |
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், குடியாத்தம் | கண்காணிப்பாளர் | மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை 1 |
சோதனை சாவடி, காட்பாடி | உதவியாளர் | மோட்டார் வாகன ஆய்வாளர். (தொ.நு,அ) |
சோதனை சாவடி, சேர்காடு | உதவியாளர் | மோட்டார் வாகன ஆய்வாளர். (தொ.நு,அ) |
வட்டாரபோக்குவரத்து அலுவலகம், இராணிப்பேட்டை | நேர்முக உதவியாளர் | வட்டார போக்குவரத்து அலுவலர் |
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், அரக்கோணம். | கண்காணிப்பாளர் | மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை 1 |
வட்டாரபோக்குவரத்து அலுவலகம், வாணியம்பாடி | நேர்முக உதவியாளர் | வட்டார போக்குவரத்து அலுவலர் |
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், திருப்பத்தூர் | கண்காணிப்பாளர் | மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை 1 |
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், ஆம்பூர். | கண்காணிப்பாளர் | மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை 1 |