மார்க்கபந்தீஸ்வரர் கோயில்
இத்திருகோயில் வேலூரிலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் விரிஞ்சிபுரம் ஊராட்சியில் அமைந்துள்ளது. கோயிலின் கோபுரம் சுமார் 110 அடியை கொண்டது. இக்கோயில் அமைந்துள்ள சிம்மதீர்த்தம் முற்றிலும் வித்தியாசமானது. சிம்மக்குளத்தில் நீராட கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு அன்று மகளிர் மட்டும் அனுமதி அளிக்கப்படுகின்றனர். தம்மைப் பிடித்துள்ள தீக்காற்று நீக்கமடையவும் மழலைவரம் வேண்டியும் சிம்மக்குளத்தில் நீராடிடும் பெண்கள் ஈரத்துணியுடனேயே, ஆலயத்தின் மண்டபத்தில் படுத்துறங்கவதும் நற்சொர்பனம் கண்டு விரைவில் கருத்தரிக்கும் பாக்கியம் பெறுவதும் மக்களின் அசையா நம்பிக்கையாக உள்ளது. இத்திருக்கோயிலில் நேரத்தை காட்டும் சூரிய ஒளிக் காட்டி கடிகாரம் ஒன்று உள்ளது.
தரிசன நேரம்: காலை 6.00 முதல் மதியம் 12.00 மாலை 4.00 முதல் இரவு 8.00 வரை
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி
சாலை வழியாக
வேலூர் நகரில் இருந்து சுமார் 14 கி.மீ தூரத்தில் உள்ளது