மோர்தானா அணை
வகை
இயற்கை / கண்ணுக்கினிய அழகு
இந்த அணையானது வேலூர் நகரிலிருந்து சுமார் 55கிமீ தொலைவிலும் குடியாத்தம் நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும் கர்நாடக மற்றும் ஆந்திர மாநில எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த அணை சுமார் 30அடி ஆழமும் 100 ஹெக்டேர் பரப்பளவும் கொண்டுள்ளது. இந்த அணைக்கு மழை காலங்களில் கர்நாடக மற்றும் ஆந்திர மாநில காடுகளில் பெய்யும் மழை நீர் கௌண்டணியா ஆறு மூலமாக இந்த அணைக்கு வருகிறது. இந்த அணையானது பொது பணித்துறை(நீர்வள ஆதாரங்கள்) கட்டுப்பாட்டில் உள்ளது.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி
சாலை வழியாக
வேலூர் நகரில் இருந்து சுமார் 55 கி.மீ தூரத்தில் உள்ளது